search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளங்கள் நிரம்பியது"

    • சாலை பள்ளங்களில் மழை நீர் தேங்கியது
    • வாணியம்பாடியில் 14 மி.மி. மழை பதிவானது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நேற்று காலை முதல் லேசான மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது.

    இதனால் சாலை பள்ளங்களில் மழை நீர் தேங்கியது தொடர்ந்து நேற்று இரவு முதல் மழை பெய்யத் தொடங்கி விடிய விடிய மழை பெய்து கொண்டிருக்கிறது திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், வாணியம்பாடி ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நேற்று தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் குளங்கள் குட்டைகள் நிரம்பி உள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு;-

    ஆம்பூர்-2.40, ஆம்பூர் சர்க்கரை ஆலை-12.50, ஆலங்காயம்- 12.70, வாணியம்பாடி-14, நாட்டறம்பள்ளி-3, நாட்றம்பள்ளி சக்கரை ஆலை-2, திருப்பத்தூர் -9.20.

    ×